LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

பீஸ் கிச்சடி வித் சிம்பிள் சில்லி சிக்கன் (Pease Khichdi with Simple Chilli Chicken)

தேவையானவை :


பாஸ்மதி அரிசி - 1 1/2 டம்ளர்

தேங்காய் பால் - ஒரு டம்ளர்

வெங்காயம் - ஒன்று (பொடித்தது)

தக்காளி - 2 டீஸ் ஸ்பூன் (பொடித்தது)

இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்

புதினா தழை - சிறிது

எண்ணெய் - 5 டீஸ் ஸ்பூன்

நெய் - ஒரு டீஸ் ஸ்பூன்

பச்சை பட்டாணி - கால் கப்(வேகவைத்தது)

பட்டை - 2 இன்ச் அளவு

பச்சை மிளகாய் - 2 (கீறியது)

மஞ்சள் தூள் - ஒரு டீஸ் ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 1/2 டீஸ் ஸ்பூன்



சிக்கனுக்கு தேவையானவை :


போன் லேஸ் சிக்கன் - கால் கிலோ

இஞ்சி,பூண்டு விழுது - ஒரு டீஸ் ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் - ஒரு டீஸ் ஸ்பூன்

சோயா சாஸ் - கால் டீஸ் ஸ்பூன்

தக்காளி சாஸ் - கால் டீஸ் ஸ்பூன்

பிரட் கிரம்ஸ் - ஒரு டீஸ் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ் ஸ்பூன்

ரெட் ஃபுட் கலர் - சிறிது

கடலை மாவு - ஒரு டீஸ் ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக கழுவி விட்டு ஊற வைக்கவும்.குக்கரில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பின்பு பட்டாணி, புதினா, மல்லி தழைகள் மற்றும் மசாலாத் தூள் வகைகள் போட்டு வதக்கவும்.


2.கலவையில் எல்லாம் சேர்ந்து வதங்கியதும் தேங்காய் பாலும், ஒன்றரை டம்ளர் தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பும் போடவும்.கொதி வந்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி சேர்க்கவும்.அதன் பிறகு நன்கு கொதிக்கும் போது குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து எட்டு நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.


3.சிக்கன் ஃப்ரை : சிக்கனை நன்கு கழுவி சிறு,சிறு துண்டுகளாக்கி அதனுடன் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டி, பத்து அல்லது பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.பத்து  நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Pease Khichdi with Simple Chilli Chicken

Ingredients for pease khichdi with Simple Chilli Chicken:

 

Basmati Rice-1 1/2 Cup

Coconut Milk-1 Cup

Onion-1 (Chopped)

Tomato-2 Tsp (Chopped)

Ginger, Garlic Paste-2 Tsp

Mint Leaves-Little

Oil-5 Tsp

Ghee-1 Tsp

Green Peas-1/4 Cup (Boiled)

Cinnamon-2 inch Piece

Green Chilly-2 (Peeled)

Turmeric Powder-1 Tsp

Garam Masala-1 1/2 Tsp

 

Ingredients for Chicken:

 

Boneless Chicken-1/4 Kg

Ginger, Garlic Paste-1 Tsp

Corn Flour-1 Tsp

Soya Sauce-1/4 Tsp

Tomato Sauce-1/4 Tsp

Bread Crumbs-1 Tsp

Chilly Powder-1 Tsp

Red Food Color-Little

Kadalai Mavu-1 Tsp

Oil-for Seasoning

Salt-as Needed

 

Procedure to make pease khichdi with Simple Chilli Chicken:

 

1. Allow the rice to soak well. In a cooker, add oil, ghee, cinnamon and fry for a while and then add chopped onion, tomato, green chilly and saute well. Then add ginger, garlic paste, green peas, mint, coriander leaves and given masala powders.

2. Then add coconut milk, 1 1/2 cup of water and salt. When starts boiling, add rice and allow 1 whistle to boil. Allow medium flame for 8 minutes and remove from flame.

3. Wash and chop the chicken into small pieces and mix along with given ingredients without adding oil. Then let to marinate for 10 or 15 minutes. After 10 minutes, deep the chicken pieces in oil.

 

 

 

 

 

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.