LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

சேலம் மீன் குழம்பு (Salem Fish Curry)

தேவையானவை :


மீன் - 1/2 கிலோ,

வெந்தயம் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

சின்ன வெங்காயம் - 10,

பூண்டு - 8 பல்,

தக்காளி - 1,

நல்லெண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

புளி -ஆரஞ்சு பழ அளவு



வதக்கி அரைக்க தேவையானவை :


சீரகம் - 1 டீஸ்பூன்,

மிளகு - 1 டீஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 15,

பூண்டு - 10 பல்,

தக்காளி - 2,

தேங்காய் துருவல் - 1/4 மூடி,

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,

தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்


தாளிக்க தேவையானவை :


கறிவேப்பிலை - சிறிது,

கடுகு - 1/2 டீஸ்பூன்,

சீரகம் - 1/4 டீஸ்பூன்,

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.



செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.வெங்காயம், பூண்டை இரண்டாகவும்,தக்காளியை பெரிய துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.ஒரு கிளாஸ் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.

2.ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் வதக்கி, அத்துடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றக அரைக்கவும்.அரைத்த விழுதை புளிகரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.

3.கடாயில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.

4.குழம்பில் மீன் நான்கு வெந்ததும், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து, குழம்பில் போட்டு இறக்கவும்.நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி, அடுப்பில் சூடு செய்யவும்.நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும்.சுவையான மணமான மீன் குழம்பு தயார்.

Salem Fish Curry

Ingredients for Salem Fish Curry :


Fish Pieces - 1/2 kg,

Fenugreeks - 1 tsp,

Salt - as needed,

Small Onion - 10,

Garlic - 10 Cloves,

Tomato - 1,

Gingly Oil - 1 Tsp,

Tamarind Extract - Orange Fruit sized.


For Roasting and Grinding :


Cumin - 1 tsp,

Pepper - 1 Tsp,

Small Onion - 15,

Garlic - 10 cloves,

Tomato - 2,

Coconut Shredded - 1/4 Cup,

Chilli Powder - 2 Tsp,

Coriander Powder - 1 Tbsp,


For Seasoning : 


Curry Leaves - Little,

Mustard - 1/2 Tsp,

Cumin - 1/4 Tsp,

Fenugreeks - 1/4 Tsp,

Oil - 1 Tbsp.


Method to make Salem Fish Curry :


1. Wash the fish pieces with add of salt, turmeric powder. Chop the garlic, onion and tomatoes. Soak the tamarind in a glass of water and filter it well. 

2. Heat half spoon oil in a pan then add pepper, cumin, onion, garlic, tomato, coconut and fry them well. Then add coriander powder, chilli powder along with them. Then grind it well. And mix this paste along with tamarind extract. 

3. Heat oil in a pan then add mustard, cumin, fenugreeks, curry leaves and saute it well. Then add chopped garlic, onions and tomatoes then fry it well. Then add mixed tamarind extract then add turmeric powder, salt and allow it to boil well. When it get thick density then add fish pieces.

4. When fish has cooked. Fry the fenugreeks in dry pan. Powder it well. Then add this powder along with them. Then add 1 Tbsp boiled gingly oil along with them. Stir it well.


Tasty Salem Fish Curry is ready to serve.

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.