குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து தான் இந்த அஷ்ட வர்க்க உணவுப்பொடி.
தேவையானவை :
1. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.
செய்முறை :
1. இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும்.
2. இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!
3. இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும்.
|