LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

தம் பிரியாணி

தேவையானவை :
1. பாசுமதி அரிசி - 2 கப்
2. பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் சேர்த்த கலவை - ஒன்றரை கப்
3. பெரிய வெங்காயம் - 2
4. தக்காளி - 2
5. பச்சை மிளகாய் - 3
6. மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்
7. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
8. இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
9. புதினா - சிறிது
10. கொத்தமல்லி - 1 கைப்பிடி
11. நெய்யும் எண்ணெயும் சேர்த்து - 4 டேபிள்ஸ்பூன்
12. உப்பு - தேவைக்கேற்ப
13. வறுத்த முந்திரி - 8
14. கேசரி கலர் - 1 சிட்டிகை
15. பாலில் கரைத்த குங்குமப்பூ - சிறிது
16. தயிர் - அரை கப்
17. எலுமிச்சை சாறு - தேவைக்கு.
தாளிக்க தேவையானவை :
1. பட்டை - ஒரு  துண்டு
2. கிராம்பு - 2
3. ஏலக்காய் - 2
4. அன்னாசிப்பூ - 1
5. மராட்டி மொக்கு -1
6. பிரியாணி இலை -  1
அலங்கரிக்க தேவையானவை :
1. நெய்யில் சிவக்க வறுத்த வெங்காயம் - 1
2. முந்திரி - 6

செய்முறை :

1. முதலில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கவும்.

2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்க்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காய்கறிக் கலவை, மல்லி மற்றும் புதினா, கேசரி கலர் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
3. வதக்கும்போதே காய்கறிகள் சிறிது வெந்துவிடும். பிறகு தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு மூன்று கப் சூடான தண்ணீர் சேர்த்துக் கொதிக்கும் போது, அரிசி, உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் அரிசியை வேகவிடவும். இரண்டு கொதி வந்ததும், குக்கர் மூடியால் மூடாமல், வேறு ஒரு கனமான தட்டு போட்டு மூடி வேக விடவும். இடையில் இரண்டு முறை திறந்து, மெதுவாக அரிசியைக் கிளறி, குக்கரை இறக்கவும். அ

4. அடுப்பின் மேல் ஒரு பழைய தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் குக்கரை வைத்து, மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும். மூடிய குக்கரின் மேல் ஒரு கனமான பாத்திரம் அல்லது தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்கவும். இதுதான் தம் போடுவது. ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு மெதுவாகத் திறந்து பாலில் கரைத்த குங்குமப் பூ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். பரிமாறும் போது, வறுத்த வெங்காயம், முந்திரி சேர்த்து அலங்கரித்துக் கொடுக்கவும். பிறகு தயிர் பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும்.

Dum Briyani

Ingredients :

Basumathi Rice - 2 Cups

Green Peas , Potatoes, Beans, Carrot, Cauliflower etc - 1 1/2 Cup

Large Onion - 2

Tomato - 2

Green Chillies - 3

Red Chilli Powder - 1 1/2 tsp

Turmeric Powder - 1/4 tsp

Ginger Garlic Paste - 1 1/2 Tbsp

Mint - Handful

Coriander - Handful

Ghee + Oil -  4 tbsp

Salt - as needed

Fried Cashew Nuts - 8 

Kesari Colour - 1 Pinch

Soaked saffron Milk - Little

Curd - Half Cup

Lemon - as needed

For Seasoning :

Cinnamon - 1 Piece

Cloves - 2

Cardamom - 2

Star Anise - 1

Maratti Mokku - 1

Bay Leaf - 1 

For Decoration :

Fried Onion in ghee - 1 

Cashew Nuts - 6

Method :

1. Rinse the rice very well in water till it runs clear of starch. then soak the rice for 30 mins in enough water. Cut the Vegestables. 

2. Heat oil and Ghee in the pressure cooker or pan. Add the thinly sliced onions. saute them on a low to medium flame, till they get golden. Now add the ginger­garlic paste to the 3/4 of the browned onions in the cooker or pan, stir and saute till the raw aroma of ginger­garlic goes away. Now add the biryani masala & red chilli powder and all. Add the chopped vegetables, mind, coriander leaves, colour and  stir.

3. Reduce the flame and add the yogurt slowly, stirring it. Now add 3 cups of hot water, rice and salt. stir very well. The close the lid with stronger plate. Dont close with cooker lid. Stir 2 to 3 three times in between.  

4. Then heat the dosa pan in low heat then place the cooker on it. Then place a stonger pan with water. Allow it for 5 minutes. Turn off the stove and add sprinkle half of the mint leaves, 1 tbsp oil/ghee and the saffron milk also add half of the fried onion evenly on this layer.

Serve along with curd onion. 

 

by Swathi   on 10 Mar 2016  3 Comments
Tags: வெஜ் பிரியாணி   தம் வெஜ் பிரியாணி                 
 தொடர்புடையவை-Related Articles
தம் பிரியாணி தம் பிரியாணி
கருத்துகள்
22-Sep-2018 20:40:27 deva said : Report Abuse
சூப்பர்
 
14-Oct-2017 06:25:11 kumar said : Report Abuse
super briyani
 
16-Aug-2016 21:16:48 AnandanD said : Report Abuse
Very useful
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.