LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

சிம்பிள் மோர் குழம்பு

தேவையானவை :

 

1. மோர் - ஒரு  கப்

2. தேங்காய் - அரை கப்

3. மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

4. சீரகம் - 1 டீஸ்பூன்

5. பச்சை மிளகாய் - 1

6. கடுகு - 1 டீஸ்பூன்

7. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

8. கறிவேப்பிலை - சிறிது

9. வரமிளகாய் - 1

10. தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

11. உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

1. முதலில் தேங்காய், பச்சை மிளகாய், மல்லித், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்ஸியில்  நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

 

2. பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

 

3. பின் மிதமான தீயில் அதனை மூன்று  நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு ரெடி!!!

 

Simple Butter Milk Curry

Ingredients :

1. Curd (Butter Milk)- 1 cup

2. Coconut - 1 Cup

3. Coriander Seeds - 1 tbsp

4. Cumin - 1 tsp

5. Green Chillies - 1 

6. Mustard - 1 tsp

7. Turmeric Powder - 1 tsp

8. Curry Leaves - little 

9. Red Chilly - 1

10. Coconut Oil - 2 tbsp

11. Salt - as needed

Method :

1. Grind the coconut, green chillies, coriander seeds, cumin, turmeric powder and water. Grind it in a fine paste. 

2. Heat the butter milk in a pan and add the ground masala paste into it. Stir it and add salt as per taste. 

3. Boil it for 3 minutes in a medium heat. Then turn off it. Take an another pan , add coconut oil then add mustard allow it to splutter, add curry leaves, dry red chillies. Mix them into butter milk curry. Stir it. Simple butter milk curry is ready.

by Swathi   on 05 Mar 2016  2 Comments
Tags: Simple Mor Kuzhambu   Mor Kuzhambu                 
 தொடர்புடையவை-Related Articles
சிம்பிள் மோர் குழம்பு சிம்பிள் மோர் குழம்பு
கருத்துகள்
16-Sep-2017 05:59:06 முத்துமலர்மதி said : Report Abuse
அருமை! மிகவும் எளிதானதும் கூட!
 
04-Apr-2017 00:40:41 திவ்யா said : Report Abuse
அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்த உணவுகளும் கூட இருக்கிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.