|
||||||||
அப்பிள் தோசை (apple dosa) |
||||||||
தேவையானவை : அப்பிள் - 3 பட்டர் - 4 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - 1/4 கப் கறித்தூள் - 1 டீஸ்பூன் சீஸ் - 1/4 கப் சோளமா - 2 டீஸ்பூன் மைதாமாவு - 1 கப் உப்பு- சிறிதளவு செய்முறை 1.முதலில் மாவை தண்ணீர், உப்பு விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். 2.ஒரு கடாயில் பட்டர் உருகியதும் வெங்காயம் வதங்கியதும் அதனுள் அப்பிள் துண்டுகளைப் போட்டு வதக்கவும். 3.பின்பு அதில் கறித்தூள், சோளமாக்கரைசல் சேர்த்து கிளறவும். 4.கரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி மெல்லிய பெரிய தோசைகளாக சுட்டெடுக்கவும். 5.பின்பு ஒவ்வொரு தோசையின் நடுவிலும் நீளவாக்கில் அப்பிள் கலவையை வைத்து இரு கரைகளையும் அதன் மேல் மூடி விடவும். சுவையான அப்பிள் தோசை தயார். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|