|
||||||||
அரைத்த பூசணிக்காய் சாம்பார் (ground pumpkin sambar) |
||||||||
தேவையானவை : பூசணிக்காய் - ஒரு கீற்று (மெல்லியதாக நறுக்கியது) துவரம் பருப்பு - 100 கிராம் கடுகு - அரை டீஸ்பூன் தனியா - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் - 1/4 கப் கறிவேப்பிலை - 2 கொத்து கொத்தமல்லி - 2 கொத்து உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் வற்றல் - 6 கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் புளிகரைசல் - ஒரு கப் சீனி - 2 டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.சீவிய பூசணிக்காய் துண்டுகளை தண்ணீரில் அலசி ஒரு தட்டில் போட்டு இட்லி பானையில் வைத்து ஆவியில் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். பூசணிக்காயில் தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்க வேண்டும். 2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும். வறுத்த பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 3.ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்த பிறகு அடுப்பில் வைத்து வேக வைத்த பூசணிக்காயை போட்டு அதிகமான தீயில் வைத்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும். 4.ஊற வைத்திருக்கும் புளியுடன் உப்பு போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 3 நிமிடம் கழித்து அடுப்பில் குழம்பு கொதிக்கும் போது மிதமான தீயில் வைத்து, அதன் பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து அரைத்த வைத்திருக்கும் விழுதை சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் கலக்கி விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். 5.இரண்டு நிமிடம் கழித்து கொதித்ததும் விருப்பம் உள்ளவர்கள் சீனி 2 டீஸ்பூன் சேர்க்கலாம். அத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். சாம்பார் கொதித்ததும், வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கவும். சுவையான அரைத்த பூசணிக்காய் சாம்பார் ரெடி. |
||||||||
Ground Pumpkin Sambar | ||||||||
Ingredients for Ground Pumpkin Sambar:
Pumpkin-1 Piece (Thinly Sliced) Red Gram-100 G Mustard- 1/2 Tsp Coriander-1 Tbsp Cumin- 1 Tbsp Grated Coconut-1/4 Cup Curry Leaves-2 Bunch Coriander Leaves-2 Bunch Salt-1 Tbsp Dry Chilly-6 Bengal Gram-2 Tbsp Turmeric Powder-1/2 Tsp Tamarind Juice-1 Cup Sugar-2 Tbsp Oil-1 Tbsp White Black Gram-1 Tbsp
Procedure to make Ground Pumpkin Sambar:
1. Wash the sliced pumpkin pieces and boil in idli tawa for 15 minutes. Do not add water to boil. 2. Heat oil in a pan, add coriander, bengal gram, black gram, dry chilly and cumin and saute for 2 minutes. Then spread the fried ingredients in a plate and allow to cool. Then grind them along with grated coconut and 3 table spoon of water in to coarse paste. 3. Take a vessel, add red gram and pour water to cover the dhal. Then place this vessel in a cooker and allow to boil for 15 minutes. Then add turmeric powder. Then add boiled pumpkin and boil in high flame. 4. Mix the tamarind along with salt and water and then filter it. After 3 minutes, allow medium flame and then add tamarind juice. After 1 minute add grinded paste and 1/4 cup of water and stir well and boil for 2 miinutes. 5. After 2 minutes, we can add 2 tea spoon of sugar. Then add curry leaves and coriander leaves and allow to boil for 5 minutes. Heat oil in a pan, add mustard and let to splutter and put in to sambar and then remove from flame. Tasty ground pumpkin sambar is ready.
|
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|