|
||||||||
முட்டைக்கோஸ் சீஸ் கோலா (cabbage cheese cola) |
||||||||
தேவையானவை :
முட்டைக்கோஸ் - 100 கிராம்
ரொட்டித் தூள் - 6 ஸ்பூன்
பன்னீர் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பிரெட் துண்டுகள் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
2. முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
3. வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையானவை :
முட்டைக்கோஸ் - 100 கிராம் ரொட்டித் தூள் - 6 ஸ்பூன் பன்னீர் - 50 கிராம் உருளைக்கிழங்கு - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 பிரெட் துண்டுகள் - 2 எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
2. முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
3. வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
|
||||||||
Cabbage Cheese Cola | ||||||||
INGREDIENTS : Cabbage - 100 g, Bread Crumbs - 6 tsp, Paneer - 50 g, Potato - 200 g, Green Chilly - 4, Bread pieces - 2, Lemon Juice - 1 tsp, Salt - as needed, Refined Oil - as needed. METHOD : 1. Chop the Cabbage and green chillies finely. Grate the paneer well. Boil the potato and peel it of then knead it well. 2. With Cabbage add the kneaded potatoes, chopped chilies, grated paneer and soaked and kneaded bread crumbs. Continously add the lemon extract and enogh salt. Then knead it well. And rotate the mixture like a small balls. Coat the balls with bread crumbs. 3. Heat the Refined oil in Frying Pan , put the mixture balls in oil. Fry it until it becomes golden colour. Cabbage Cheese Cola is ready. Have it with Tomato Sauce. |
||||||||
by Swathi on 25 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|