|
||||||||
கேரட் சாதம் (Carrot Rice) |
||||||||
தேவையானவை : அரிசி - 2 கப் கேரட் துருவல் - 2 கப் கடலைப்பருப்பு - 1 டீஸ் ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 டீஸ் ஸ்பூன் வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 3 உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு சீரகம் கரம் மசாலாத்தூள் வறுத்த நிலக்கடலை - கைப்பிடி கறுவேப்பிலை, கொத்தமல்லித்தழை
செய்யும் முறை : 1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக கழுவி கொஞ்சம் உதிரியாக சாதத்தை வடித்து கொள்ளவும்.அரிசி வடிக்கும்போதே சாதத்திற்குத் தேவையான உப்பைப் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.சாதத்தை அகண்ட பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி அதில் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். 2.அதனுடன் கடலைப் பருப்பு, உளுந்தப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, கேரட் துருவலை அதில் கொட்டி வதக்கவும். கேரட் நன்கு வதங்கியதும் கரம் மசாலாத் தூள் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு கேரட்டை வேக விடவும்.இக்கலவையை வெந்த சாதத்தில் நன்கு கலக்கவும்.வறுத்த நிலக்கடலையை,கறுவேப்பிலை, கொத்தமல்லித் தழையைத் தூவி சூடாக பரிமாறவும். |
||||||||
Carrot Rice | ||||||||
Ingredients for Carrot Rice:
Rice-2 Cup Grated Carrot-2 Cup Bengal Gram-1 Tsp Black Gram-1 Tsp Onion-1 Green Chilly-3 Salt-as Needed Oil-2 Tbsp Mustard Cumin Garam Masala Fried Groundnut-Hand Pinch Curry Leaves, Coriander Leaves
Procedure to make Carrot Rice:
1. Wash and boil the rice along with enough salt. Then place the boiled rice in a wide vessel and allow to cool. Heat oil in a pan, add mustard, cumin and let to splutter. 2. Then add bengal gram, black gram and fry till get golden color. Then add green chilies, onion, grated carrot and fry well. Now add garam masala powder, 1/4 cup of water and let to boil well. Now add this carrot masala into boiled rice. Finally garnish with fried ground nut, curry leaves and coriander leaves.
|
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|