தேவையானவை :
1. புளித்த தயிர் - ஒரு கப்
2. தண்ணீர் - அரை கப்
3. மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
4. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு :
1. ஸ்பூன் துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
2. மிளகு - ஒரு டீஸ்பூன்
3. சீரகம் - ஒரு டீஸ்பூன்
தாளிப்பதற்கு :
1. எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
2. கடுகு - ஒரு டீஸ்பூன்
3. சீரகம் - அரை டீஸ்பூன்
4. பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
5. வரமிளகாய் - 1
6. கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் வறுத்து அரைப்பதற்கு மேலே கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
2. பிறகு புளித்த தயிரை தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
3. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து, பின் கலந்து வைத்துள்ள புளித்த தயிர் கலவையை அத்துடன் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால், சூடான சுவையான தயிர் ரசம் ரெடி!!!
|