LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

கத்திரிக்காய் புளிக் குழம்பு (Brinjal Tamarind Sauce)

தேவையானவை :


கத்திரிக்காய் - 5

பெரிய வெங்காயம் - 1 (பொடித்தது)

பூண்டு - 10 பற்கள்

நல்லெண்ணை - தாளிக்க

சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவைகேற்ப

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

புளி - சிறிய எலுமிச்சை அளவு

தேங்காய் - 5 துண்டு

உப்பு - தேவையான அளவு



செய்முறை :


1.தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.கத்திரிக்காய்களை முழுவதுமாக நறுக்காமல் முக்கால் பாகத்திற்கு காய்களைக் கீறிக்கொள்ளவும்.


2.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு, உளுந்து தாளித்ததும், சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பிறகு பூண்டை வதக்கவும், கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும்.காயை வதக்கும் போது மிதமான தீயில் வைத்து, சிறிது நீர் விட்டு வதக்கவும்.


3.கத்திரிக்காய் பாதி வெந்த நிலையில், புளியை கரைத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான புளி குழம்பு அரை மணிநேரத்தில் தயார்.

Brinjal Tamarind Sauce

Ingredients for Brinjal Tamarind Sauce:

 

Brinjal-5

Large Onion-1 (Chopped)

Garlic-10 Flakes

Sesame Oil-for Tempering

Sambar Powder-2 Tsp

Curry Leaves-as Needed

Asafoetida-1/4 Tsp

Tamarind-Small Lemon Size

Coconut-5 Pieces

Salt-as Needed

 

Procedure to make Brinjal Tamarind Sauce:

 

1. Grind the coconut along with water. Peel the brinjals.

2. Heat sesame oil in a pan, add mustard, black gram, curry leaves and let to splutter. Then add little bit asafoetida powder. Then add chopped onion and garlic and saute well. Then add peeled brinjals along with water and allow medium flame to boil.

3. When the vegetables half cooked, add tamarind juice, salt and sambar powder. When the curry starts boiling, add ground coconut paste. Allow 10 minutes to boil and remove from flame. Brinjal tamarind sauce is ready to taste.

by kowshika   on 16 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.