|
||||||||
பொரிச்ச குழம்பு (Fried Curry) |
||||||||
தேவையானவை : காய்கறி நறுக்கியது - 2 கப் (விருப்பமான காய்கறிகள்) பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - 1 டீஸ்பூன் அரைத்தெடுக்க தேவையானவை : தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 அரிசி மாவு - 1 டீஸ்பூன் தாளிக்க தேவையானவை : எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 2 (பொடித்தது) கறிவேப்பிலை - சிறிது செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.காய்கறித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு த்ண்ணீரை சேர்த்து வேக வைக்கவும். காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். 2.பச்சை மிளகாய்,தேங்காய், சீரகம், அரிசி மாவு ஆகியவற்றை அரைத்தெடுத்து கொதிக்கும் குழம்பில் விட்டுக் கிளறவும். மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும். |
||||||||
Fried Curry | ||||||||
Ingredients for Fried Curry:
Chopped Vegetables-2 Cup (Any Vegetables) Green Gram-1/2 Cup Sambar Powder-1 Tsp Turmeric Powder-1 Pinch Salt-1 Tsp
Ingredients for Grinding:
Grated Coconut-2 Tbsp Cumin-1/2 Tsp Green Chilly-1 Rice Flour-1 Tsp
Ingredients for Tempering:
Oil-1 Tsp Mustard-1/2 Tsp Small Onion-2 (Chopped) Curry Leaves-Little
Procedure to make Fried Curry:
1. In a vessel, add green gram along with turmeric powder and allow to boil well. Put the chopped vegetables in a vessel and add sambar powder, turmeric powder, salt and then add water to cover the vegetables and let to boil them. When vegetables boiled well, add the boiled gram and let to boil. 2. Grind green chilly, coconut, cumin and rice flour. Then add the grinded paste in to boiling sambar and stir well. Season the mustard, onion and curry leaves and let to splutter and then put into sambar.
|
||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|