|
||||||||
பச்சைப்பயிறு குழம்பு (Green Dal curry) |
||||||||
தேவையானவை : பச்சைப்பயிறு - 100 கிராம் சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) பூண்டு - 10 பல் (நறுக்கியது) உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன் கடலைப் பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு தக்காளி - 1 பெரியது பெருங்காயம் - 2 சிட்டிகை உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன் செய்முறை : 1. வெறும் வாணலியில் பச்சைப்பயிறை வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் நன்றாக அலசி கழுவிக் கொள்ளவும். குக்கரில் கழுவிய பச்சைப்பயிறு, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், மிளகுத்தூள், சிறிது எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, இவையனைத்தும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். 2.குக்கரில் ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும்.பிறகு வெந்த பச்சைப்பயிற்றில் புளியைச் சேர்த்து மத்தைக் கொண்டு நன்றாகக் கடையவும்.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுத்து, இதனுடன் கடைந்து வைத்துள்ள பச்சைப்பயிறு மசியலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். |
||||||||
Green Dal Curry | ||||||||
Ingredients for Green Dal Curry:
Green Gram-100 G Small Onion-10 (Chopped) Garlic-10 Flakes (Chopped) Black Gram-1/2 Tsp Bengal Gram-1/2 Tsp Tamarind-Lemon Size Tomato-1 Big Size Asafoetida-2 Pinch Salt-as Needed Pepper Powder-1/2 Tsp Green Chilly-1 Cumin-1/2 Tsp Oil-2 Tsp Mustard-1/2 Tsp
Procedure to make Green Dal Curry:
1. In an empty pan, add green gram and fry till the smell subsides. Then wash the dhal in water. In a cooker, add green gram, garlic, onion, tomato, green chilly, cumin, pepper powder and oil. Then add water and cover the cooker. 2. Allow 5 whistles and remove from flame. Then add tamarind together with boiled dhal and mash them finely. Heat oil in a pan, add mustard, black gram, Bengal gram and let to splutter and then add asafetida, dry chilly, curry leaves, mashed dhal, water, salt and let to boil. When the curry comes thick consistency, remove from flame and serve it. |
||||||||
by suganya on 18 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|