|
||||||||
பாசிப் பருப்பு குழம்பு (paasipparuppu kulambu) |
||||||||
தேவையானவை :
பாசிப் பருப்பு - 1.5 டேபிள் ஸ்பூன் அவரைக்காய்- 200 கிராம் சிவப்பு மிளகாய் : 6 சீரகம் : 1 ஸ்பூன் தேங்காய்ப் பூ : 1.5 டேபிள் ஸ்பூன் பூண்டு பல் : 3 சின்ன வெங்காயம் : 9 எலுமிச்சம்பழம் - 1 நெய்: 1 டீ ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிது சீரகம் - 1 டீ ஸ்பூன் உப்பு : ருசிக்கு தகுந்தபடி செய்முறை: 1.முதலில் பாசிபருப்புன், காய் சேர்த்து வேக வைக்கவும். 2.பின்பு மிளகாய், தேங்காய்ப்பூ, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் 3.பிறகு பருப்புன் அரைத்தவற்றை சேர்த்து கரைத்து, அடுப்பில் வைக்கவும். 4.ஒரு கடாயயை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு,சீரகம் ,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, தாளித்துக் குழம்பில் சேர்க்கவும்.கடைசியாக எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கவும். |
||||||||
by kaviyasri on 24 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|