|
||||||||
கத்தரிக்காய் மசியல் (brinjal masiyal ) |
||||||||
தேவையானவை: பச்சைப்பருப்பு_1/2 கப் கத்தரிக்காய்_4 பச்சை மிளகாய்_2 சின்ன வெங்காயம்_3 தக்காளி_பாதி பூண்டு_2 பற்கள் மஞ்சள் தூள்_ஒரு பின்ச் உப்பு_தேவையான அளவு கொத்துமல்லி இலை_கொஞ்சம் நல்லெண்ணெய்_1 டீஸ்பூன் கடுகு உளுந்து சீரகம் காய்ந்த மிளகாய்_1 பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை: 1.பச்சைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துப் போதுமானத் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். 2.பருப்பு பாதி வேகும் போதே அதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய்,வெங்காயம் 2,தக்காளி,பூண்டு சேர்த்து வேக விடு.எல்லாம் நன்றாக வெந்த பிறகு இறக்கி ஆற வைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றவும். 3.இதை மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும். 4.மீதமுள்ள ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி மசியலில் கொட்டிக் கலக்கவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|