|
||||||||
ஸ்டஃப்டு கத்தரிக்காய்(stuffed Brinjal) |
||||||||
தேவையானவை: கத்தரிக்காய் -6 வெங்காயம்-1 கப்(அரைத்தது) தேங்காய் -2 ஸ்பூன் (அரைத்தது) கரம் மசாலா -1/2 ஸ்பூன், மிளகாய் தூள் -1 ஸ்பூன் , மல்லி தூள் -2 ஸ்பூன், சீராக தூள் -1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - சிறிது உப்பு புளி -1 /2 கப் செய்முறை : 1.மேற்கண்ட அணைத்து மசாலாக்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.கத்திரிக்காயை நடுவில் நன்கு துண்டுகளாக மட்டும் வெட்டி கொள்ளவும்.ஒவ்வொரு கத்திரிக்காயிலும் ஸ்டஃபிங்கை அடக்கி வைக்கவும். 2.ஒரு வாணலியில் எண்ணைவிட்டு ஜீரகம் ,கடுகு தாளித்து ஸ்டஃப்டு கத்திரிக்காயை போட்டு 7 நிமிடம் வதக்கவும் .பிறகு மிதம் உள்ள மசாலா கலவையும் சேர்த்து சிறுது தண்ணீர் ,புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .தண்ணீர் வற்றி சுருளாகும் வரை நன்கு கிளற வேண்டும்.கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|