|
||||||||
இடியாப்பம் - முட்டை கறி |
||||||||
தேவையானவை: முட்டை - இரண்டு எண்ணெய் - இரண்டு ஸ்பூன் கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை – சிறதளவு பெரிய வெங்காயம் - ஒன்று நறுக்கியது தக்காளி - இரண்டு நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் மல்லி தூள் - 1 ஸ்பூன் உப்பு -கொஞ்சம் எலும்பிச்சை சாறு - 3 ஸ்பூன் செய்முறை : 1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். 2. வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 3. மஞ்சள், மிளகாய், மல்லி தூள் சேர்த்து கிளறவும்.2 கப்தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்றாக கொதிக்க விடவும். இப்போது முட்டை உடைத்து ஊற்றவும். 4 . பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு உப்பு, எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறவும். முட்டை கறி ரெடி !! |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|