|
||||||||
இட்லி சாண்ட்விச் (idli sandwich) |
||||||||
தேவையானவை: இட்லி மாவு - 2 கப் காரச் சட்னிக்கு கா மிளகாய் - 10 வெங்காயம் - 8 புளி - சிறியது பூண்டு - 2 உப்பு –சிறிதளவு பச்சை சட்னிக்கு: மல்லித்தழை - அரை கட்டு தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு - 1 புளி - சிறிது பச்சை மிளகாய் - 3 உப்பு எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: 1.இட்லி மாவை சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி வேக வைத்து, ரொட்டித் துண்டுகள் போல வெட்டிக் கொள்ளுங்கள். 2.சிகப்பு சட்னிக்குக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள். 3.பச்சை சட்னிக்கு, எண்ணெயைக் காயவைத்து, சுத்தம் செய்த மல்லித்தழையுடன் மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி, அரைத்தெடுங்கள். 4.இட்லித் துண்டுகளை எடுத்து, ஒரு இட்லித் துண்டின் மேல் காரச்சட்னியைத் தடவுங்கள். 5.இன்னொரு இட்லித் துண்டை அதன் மேல் வைத்து பச்சை சட்னியைத் தடவுங்கள். அதன் மேல் மற்றொரு இட்லித் துண்டால் மூடுங்கள். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|