LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

கல்யாண சாம்பார் (Kalyana Sambar)

தேவையானவை :


வெண்டைக்காய் - 4

கத்தரிக்காய் - 1

கறிவேப்பிலை - அரு பிடி

பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

முருங்கைக்காய் - 3 துண்டுகள்

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு.

வெல்லம் - தேவைகேற்ப



எண்ணெய்யில் வறுப்பதற்கு தேவையானவை :


நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி

தனியா - 6 டேபிள்ஸ்பூன்

கடலை பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 6

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு பிடி

பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்


அரைத்துகொள்ள தேவையானவை :


தேங்காய் துருவல் - ஒரு கப்

சிறிய தக்காளி - 2


ஒரு வாணலியில் தேங்காய் மற்றும் தக்காளியுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து மேலே வறுக்க கொடுத்துள்ள வற்றை வறுத்து எல்லாத்தையும் சேர்த்து மிக்ஸ்சியில் நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும்.


 

வேகவைக்க தேவையானவை :


துவரம் பருப்பு - ஒரு பெரிய கப்

பாசி பருப்பு - 1/4 கப்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

தக்காளி -  3 துண்டுகள்

கறிவேப்பிலை - 2 இலை


எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடிக்க:


தனியா - 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்


கடைசியில் தாளிக்க தேவையானவை :


தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய் வற்றல் - 2

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்


செய்முறை:

 

1.முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.நருக்கிய காய்கறிகளை போட்டு பெருங்காயம் போட்டு வதக்கவும்.உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.


2.ஒரு டம்பளர் நீரில் புளியை கரைத்து வாணலியில் சேர்த்து காய்களை வேக விடவும்.அரைக்க வேண்டியவற்றை வறுத்து அரைக்கவும்.காய்கள் வெந்து புளி பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து குழம்பிற்கு தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.


3.கலவை எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்ததும் வேக வைத்துள்ள பருப்பு கலவையை நன்கு மசித்து சாம்பாரில் சேர்த்து மேலும் தேவையான் அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.பருப்பு சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க விட கூடாது..இரண்டு நிமிடத்தில் அனலை அனைத்து விடவும்.இதனுடன் சிறிது வெல்லம் சேர்க்கவும்.


4.மேலும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை வேறு பாத்திரத்தில் தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.எண்ணெய் இல்லாமல் வறுக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து நன்கு பொடித்து அதை குழம்பில் இரண்டு டீஸ்பூன் தூவி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.கொத்தமல்லி தூவவும் .

Kalyana Sambar

Ingredients for Kalyana Sambar:

Lady Finger-4

Brinjal-1

Curry Leaves-Hand pinch

Asafoetida-1 tsp

Coriander-Little

Oil-2 tbsp

Drumstick-3 pieces

Tamarind-Big Gooseberry size

Salt-as Needed

Jaggery-as Needed

 

Ingredients for Fry in Oil:

 

Sesame Oil-1 Big Spoon

Corinader-6 tbsp

Bengal Gram (Split)-1 tsp

Dry Chilly-6

Fenugreek-1/2 tsp

Curry Leaves-Hand Pinch

Asafoetida-1 tsp

 

Ingredients for Grinding:

 

Grated Coconut-1 Cup

Small Onion-2

In a pan, add coconut, tomato along with salt and add the given frying ingredients and grind them finely.

 

Ingredients for Boiling:

 

Red Gram-1 Big

Green Gram-1/4 Cup

Turmeric Powder-1 Pinch

Asafoetida-1 Pinch

Tomato-3 Pieces

Curry Leaves-2 Leaves

 

Ingredients for Fry without Oil and to Grind:

 

Coriander-2 tbsp

Fenugreek-1/4 tsp

Curry Leaves-1 bunch

 

Ingredients for Tempering:

 

Coconut Oil-1 tbsp

Grated Coconut-1 tsp

Mustard-1 tsp

Asafoetida-1 Pinch

Curry Leaves-little

Dry Chilly-2

Fenugreek-1 tsp

 

Procedure to make Kalyana Sambar:

 

1. Heat oil in a pan, add mustard and let to splutter. Add the Chopped vegetables along with asafoetida and saute well. Add salt and allow medium flame for 1 minute to boil.

2. Mix tamarind in 1 cup of water and put in to sambar and boil well. Fry and grind the given ingredients. When the vegetables boiled well and raw smell subsides, add grinded paste along with water and allow to boil well.

3. Mash well the dhal and put in to sambar along with water and boil them. After adding dhal, do not allow more minutes to boil. Turn off the stove within 2 minutes. Then add jaggery together with prepared sambar.

4. Later, temper the spices seperately and run the sesoning over the sambar prepared. Fry the items mentioned "fry without oil and to grind" section and grind finley and add 2 tea spoon of powder over the sambar. Cover the pan for 1 minute. Finally garnish with coriander leaves.

 

 

 

 

 

by vanitha   on 26 Jun 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
01-Jun-2015 08:18:34 பிரியா காக்னிசன்ட் said : Report Abuse
HELLO வலைத்தமிழ்.கம எனக்கு சில குறிப்புகள் உங்களிடம் இருந்து தேவைப்படுகிறது , CAN U SEND ME A LINK TO MY EMAIL ID
 
12-Oct-2013 10:08:29 பன்னீர்செல்வம் said : Report Abuse
நான் தப்பு கண்டுபிடிப்பவன் அல்ல.இங்கு தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் பொருட்களின் பெயர் மாறுபட்டுள்ளது. தமிழில் உளுத்தம்பருப்பு என்பதை ஆங்கிலத்தில் கடலை பருப்பு (பெங்கால் கிராம்தால்) என்று குறிபிடப்பட்டுள்ளது. இது போன்ற வேறு சில தவறுகளும் உள்ளன.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.