|
||||||||
கிட்ஸ் ப்ரெட் கட்லெட் (kids bread cutlet) |
||||||||
தேவையானவை:
சிறிய பாண் - 8 துண்டுகள் உருளைக்கிழங்கு - ஒன்று கேரட் துருவல்- 2டேபிள் ஸ்பூன் பீன்ஸ் துருவல்- 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் துருவல்- 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று மல்லி இலை - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன் மிளகாய் பவுடர் - கால் டீஸ்பூன் மல்லி பவுடர் - கால் டீஸ்பூன் சீரகப் பவுடர் - கால் டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மைதா - 3 டேபிள் ஸ்பூன் முட்டை - 2
செய்முறை:
1.ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும். 2.கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி விட்டு கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கி விடவும். 3.காய்கள் வெந்ததும் அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, மல்லி இலை சேர்க்கவும். இறக்கி வைத்து விடவும். 4.ஒரு பாண் துண்டின் நடுவில் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை வைத்து மற்றொரு பாண்ணினால் மூடவும். 5.இரண்டு பாண்துண்டுகளையும் சேர்த்து மூடிய பின்னர் அடித்து வைத்திருக்கும் முட்டையை அதன் மேல் ஸ்பூனினால் எடுத்து ஊற்றவும். 6.அதன் பின்னர் முட்டை கலவையின் மேல் கலந்து வைத்திருக்கும் மைதா கலவையை ஊற்றவும். 7.தவாவில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பாண் துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|