|
||||||||
முருங்கைக்கீரை அடை (murungai keerai adai) |
||||||||
தேவையானவை: துவரம் பருப்பு= 1 கப் பாசிப்பருப்பு = அரை கப் கடலைப்பருப்பு= 1 கப் உளுத்தம்பருப்பு =அரை கப் புழுங்கலரிசி = அரை கப் பச்சரிசி= அரை கப் வற்றல் மிளகாய்=8 சோம்பு=1 ஸ்பூன் வெங்காயம்=2 தேங்காய்த்துருவல்=அரை கப் கடுகு=1 ஸ்பூன் நெய்= 1 ஸ்பூன் எண்ணெய்=1 ஸ்பூன் கறிவேப்பிலை=சிறிது முருங்கைக்கீரை= 1 கப் தேவையான உப்பு செய்முறை: 1.முதலில் பருப்பு வகைகளையும் அரிசி வகைகளையும் தனித்தனியாக, போதுமான நீரில் சில மணி நேரங்கள் ஊற வைக்கவும். 2.பிறகு அரிசி வகைகளை மிளகாய், சோம்பு சேர்த்து இலேசான கொரகொரப்புடன் அரைக்கவும். 3.பின்பு பருப்பு வகைகளைச் சேர்த்து கொரகொரப்பாக உப்புடன் சேர்த்து அரைக்கவும். 4.தேங்காய்த்துருவல், முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்க்கவும். 5.நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து சுட வைத்து கடுகு, காயம், கறிவேப்பிலைகளைத் தாளித்து அடை மாவில் கொட்டி கலக்கவும். 6.தோசைக்கல்லில் மெல்லிய அடைகளாய் வார்த்து, பொன் முறுவலாய் ஆகும் வரை வேகவிட்டு எடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|