|
||||||||
பனீர் கட்லெட் (paneer cutlet) |
||||||||
தேவையானவை: பனீர்- 500g உருளைக்கிழங்கு- 3 மைதா மாவு- 6டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய்- 4 வெந்தயக்கீரை- சிறுகட்டு மல்லித்தழை- சிறுகட்டு மிளாகாய்தூள்- 2டீஸ்பூன் எலுமிச்சமப்பழச்சாறு- 1டேபிள் ஸ்பூன் ரஸ்க்தூள்-சிறிது எண்ணெய்- 250g உப்பு- 2டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் அரைகப் மாவுடன் கிழங்கு, பனீர், மிளகாய்தூள், எலுமிச்சைச்சாறு, உப்புடன், மிளகாய், வெந்தயக்கீரை, மல்லித்தழை கீரை வகையை பொடியாக நறுக்கி, சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 2.பின்பு மீதியாக உள்ள மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வையுங்கள். 3.உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவங்களில் கட்லெட் செய்து கரைத்தமாவில் தோய்த்து ரஸ்க்தூளில் புரட்டி வைத்துக் கொண்டு பின் கடாயில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து எண்ணெய் சூடான பின் கட்லெட்களை பொரித்து எடுங்கள். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|