|
||||||||
சோள தோசை (sola dosai) |
||||||||
தேவையானவை: வெள்ளைச் சோளம், பச்சரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து தனித்தனியாக அரைக்கவும் 2.ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும். 3.பிறகு தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து, ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|