|
||||||||
சோள ரவை உப்புமா (sola rava upma) |
||||||||
தேவையானவை: சோளம் – 1 கப், அரிசி ரவை – 1 கப், கோதுமை ரவை – 1 கப், பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-சிறிது, கடலைப்பருப்பு-சிறிது, பெருங்காயத்தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய்-சிறிது, உப்பு – தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். 2.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். 3.பிறகு கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். 4.பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|