|
||||||||
இனிப்பு அவல் (sweet aval) |
||||||||
தேவையானவை: அவல் - 500 கிராம் நெய் – 2டேபிள் ஸ்பூன் வெல்லம்– 250 கிராம் ஏலக்காய்பொடி - 5 தேங்காய் - ஒரு மூடி துருவியது. செய்முறை: 1.முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைய விட வேண்டும். வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 2.வடிகட்டிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போதே ஏலக்காயைப் பொடி போட வேண்டும். 3.பிறகு கொதித்ததும் அதில் அவலை போட்டு தீயைக் குறைத்து அவல் வேகும் வரை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக்கிளற வேண்டும். 4.அவல் நன்கு வெந்ததும் அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|