|
||||||||
இனிப்பு இட்லி (sweet idli) |
||||||||
தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப் உளுத்தம்பருப்பு - அரை கப் தூளாக்கிய வெல்லம் - ஒரு கப் ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன் தேங்காய் துருவல் - கால் கப் நெய் - 2 டேபிள்ஸ்பூன் ஆப்பசோடா - ஒரு சிட்டிகை. செய்முறை: 1.அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்து நைஸாக அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்க வையுங்கள். 2.பிறகு நன்கு புளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள். 3.வெல்லத்தை தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள். 4.இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்து பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|