|
||||||||
வெஜிடபிள் கோப்தா (Vegetable Kofta) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு -2 பச்சைப்பட்டாணி - அரை கப் கேரட் -2 பெரிய வெங்காயம் - ஒன்று கார்ன் ப்ளோர் மாவு : 2 டேபிள் ஸ்பூன் பிரெட் துண்டுகள் - 2 மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன் கரம்மசாலா -1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை - அரை கப் மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கிரேவி தயாரிக்க தேவையானவை: சின்ன வெங்காயம் -10 தக்காளி -5 இஞ்சி, பூண்டு, விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன் கரம்மசாலா தூள் -1 டீஸ்பூன் நெய் -1 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2.அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதைத் தொடர்ந்து வெந்த காய்கறிகள் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் உதிர்த்த பிரெட், கார்ன்ப்ளார் சேர்த்து மசித்தாற்போல் கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கிரேவி தயாரிக்க: 1.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை மிக்சியில் அரைத்து கூழாக்கி இதில் சேர்க்கவும். அதோடு தேவைக்கு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும். 2.ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும். பரிமாறும்போது கிரேவியை சற்று சூடாக்கி கோப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள். அருமையான சுவையுடன் வெஜிடபிள் கோப்தா தயார். |
||||||||
Vegetable Koptha | ||||||||
INGREDIENTS for Vegetable Koptha: Potato-2 Green peas-1/2 cup Carrot-2 Big Onion-1 Corn Flour -2tbsp Bread slice-2 Chilly Powder-11/2tbsp Garam Masala-1tsp Ginger, Garlic Paste-1tsp Coriander Leaves-1/2cup Turmeric Powder-1/4tsp Salt-Enough need INGREDIENTS to make Gravy: Small Onion-10 Tomato-5 Ginger, Garlic Paste-2tsp Chilly Powder-11/2tsp Garam Masala-1tsp Ghee-1tbsp PROCEDURE to make Vegetable Koptha: 1. Boil potato, carrot, peas and mash them well. Chop finely the onion, heat oil in a pan and add onion, ginger, garlic paste and stir well. 2. Then add chilly powder, garam masala, turmeric powder and fry until the fresh smell out. Then add boiled vegetables, coriander leaves, salt and stir them well. Then add bread crumbs, corn flour and stir them well. Then make small ping pong ball sized kopthas and deep fry them. For Gravy: 1. Chop the onion, heat ghee in a pan and add chopped onion, ginger garlic paste, chilly powder and fry till the fresh smell out. Grind finely the tomatoes and add together with ingredients. Then add salt and boil them in low flame. 2. Turn off the stove after 5minutes.Add the kopthas in hot gravy just before serving. |
||||||||
by nandhini on 17 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|